
அன்பிற்குரிய எம் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் !
« எழு » எனும் ஒரு புதிய பாடல் தொகுப்புடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி
நாம் கடந்து வந்த பாதைகள் கரடுமுரடானவை. வெற்றி, தோல்வி, துன்பம், மகிழ்ச்சி மற்றும் வலிகள் நிறைந்தவை.
நாங்கள் எமது வரலாற்றை திரும்பிப் பார்ப்போம் வரலாறு என்பது உண்மையின் குரல். வரலாறு என்பது காலத்தின் தொகுப்பு. வரலாறு என்பது ஒரு காலத்தின் நீழ்ச்சி
இந்த இறுவட்டில், நாம் எமது கதைகளை பதிவு செய்திருக்கின்றோம். எம்மோடு வாழ்ந்தவர்களை நினைவுபடுத்தியிருக்கின்றோம். மிகைப்படுத்தப்பட்டு மறைக்கப்படும் வரலாற்றை புறம்தள்ளி, நடந்ததை நடந்தபடி, இருந்ததை இருந்தபடி, ஆவணங்களின் அடிப்படையிலும், சாட்சியங்களின் வெளிச்சத்திலும் உங்கள் முன் வைக்கிறோம்.
