ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய விடுதலைப் போராட்டங்களே இன்றைய உலக வரலாற்றின் போக்கை நிர்ணயிக்கும் மாபெரும் போராட்ட சக்தியாக முக்கியம் பெறுகின்றன. ஏகாதிபத்தியம், நவ காலனித்துவம், இனவாதம் போன்ற அடக்கு முறை அட்டூழியங்களுக்கு எதிராக இன்று உலகின் பல அரங்குகளில் ஒடுக்கப்பட்ட சமூகங்களும். தேசிய இனங்களும் கிளர்ந்தெழுந்து புரட்சிகர சுதந்திரப் போராட் டங்களை நடத்திவருகின்றன. இந்த தேசிய சுதந்திரப் போராட்டங்கள் ஒவ்வொன்| றும் தனக்கே உரித்தான யதார்த்த புறநிலைகளையும் தனித்தன்மைகளையும் கொண் டுள்ளன என்பது உண்மையே.ஆயினும் இப் போராட்டங்கள் அனைத்தும் உலக வரலாற்றின் இயங்கு நியதிக்கு உட்பட்டே செயல்படுகின்றன. இந்த வரலாற்று இயக்கமானது ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் மத்தியில் எழும் போ ராட்டமாகவே வெடிக்கிறது. ஆகவே தேசிய விடுதலைப் போராட்டங்கள் சாராம்சத் தில் முற்போக்கானவை; புரட்சிகரமானவை. ஏனெனில் அவை, மனித குலத்தின் வர லாற்று ஆன்மாவாகிய சுதந்திர வேட்கையை வெளிப்படுத்துகின்றன.
தேசிய சுயநிர்ணய உரிமை என்ற மூலாதார கோட்பாட்டின் அடிப்படையில் தான் இன்றைய தேசிய சுதந்திரப் போராட்டங்கள் அனைத்தும் முன்னெடுக்கப்படு கின்றன. தனது அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் உரிமை ஒரு தேசிய இனத்திற்கு உண்டு என்ற மகத்தான சுதந்திரப் பிரகடனமாக இது அமைகிறது. சர்வதேச சட்ட மரபுகளும், ஜ.நா. சாசனமும் இந்த உரிமையை அங்கீகரித்துள்ளன. இந்த தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில்தான் தமிழீழ மக்களும் தமது தேசிய சுதந் திரப் போராட்டத்தை நெறிப்படுத்தி முன்னெடுத்து வருகறனர்.
தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டமானது நாற்பது ஆண்டு காலமான, நீண்ட, பரிணாம வரலாற்றைக்கொண்டது. அரச ஒடுக்குமுறை யும் அதற்கு எதிரான எழுச்சிப் போராட்டமுமாக இந்த வரலாறு விரிகிறது. ஈழத் தமிழர் சுதந்திர இயக்கம், ஆரம்பகாலகட்டத்தில் அமைதி வழிப் போராட்டமா கவும் பின்னர் ஆயுதப் போராட்டமாகவும் முதிர்ச்சியடைந்து உயர்வடிவம் பெற் றது. அரச ஒடுக்குமுறை இனப்படுகொலையாக தீவிரமடைந்ததன் எதிர்விளைவாகவே தமிழரின் எழுச்சிப் போராட்டம் ஆயுதம் தாங்கிய யுத்தமாக விரிவாக்கம் அடைந்து முனைப்புப்பெற்றது.
தமிழீழ மக்களின் உண்மையான பிரதிநிதிகளாகவும் அவர்களது தேசிய விடுதலை இயக்கமாகவும் திகழ்வது விடுதலைப் புலிகள் அமைப்பாகும். ஈழத் தமிழ் இனத்தின் விடிவிற்காகவும், தமிழீழ தாயகத்தின் பூரண சுதந்திரத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நீண்ட, தொடர்ச்சியான, தீர்க்கமான போராட்டத்தை நடத்திவரு கிறது. புரட்சிகர ஆயுதப் போராகவும், எழுச்சிமிகு வெகுசனப் போராட்டமாகவும் எமது இயக்கம் தேசிய விடுதலைப் போரை முன்னெடுத்துவருகிறது. தமிழீழ மக்களை தேசிய ரீதியாக அணிதிரட்டி, தேசாபிமான உணர்வைத் தட்டி எழுப்பி, தமிழீழ தேசிய எழுச்சியின் சின்னமாகவும், தேச சுதந்திரப் போராட்ட சக்தியாகவும் எமது இயக்கம் உருப்பெற்றிருக்கிறது. எமது இயக்கத்தின் போராட்ட சாதனையால் தமிழீழ மக்களின் தேசிய சுதந்திரப் போராட்டம் இன்று உலகப் பிரசித்திபெற்ற விடுதலைப் போராக சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்த ஆவணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத் திட்டத்தையும், கொள்கை விளக்கத்தையும் தெளிவுபடுத்துகிறது. முதற் பகுதியில், தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்ட வரலாறும் விடுதலைப் புலிகள் இயக் கத்தின் தோற்றம், வளர்ச்சி, முதிர்ச்சி பற்றிய வரலாற்றுப் பின்னணியும், எமது இயக்கத்தின் சாதனைகளும் சுருக்கமாக விளக்கப்படுகிறது.
வரலாற்றுப் பின்னணி: அரச ஒடுக்குமுறை
1948ம் ஆண்டு, ஆங்கில ஏகாதிபத்தியம் சிங்கள ஆளும்வர்க்கத்திடம் அரசியல் அதிகாரத்தை ஒப்படைத்து இலங்கைத் தீவுக்கு ‘சுதந்திரம்’ வழங்கியதைத் தொடர்ந்து சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையானது மிகவும் கோரமான முறை யில் தமிழீழ மக்களை தாக்கியது. இந்த ஒடுக்குமுறையானது வெறும் இனவெறியின் வெளிப்பாடாக அமையவில்லை. தமிழ்த் தேசிய அமைப்பின் அத்திவாரங்களை தகர்த் தெறிந்து, இனரீதியாக தமிழரை அழிக்கும் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை வடிவ மாகவே அது அமையப்பெற்றது. தமிழ்த் தேசியத்திற்கு மூலாதாரமான மொழி, கலாச்சாரம், கல்வி, பொருளாதார வாழ்வு, பாரம்பரிய பூமி என்ற ரீதியில் பல துருவங்களில் இந்த ஒடுக்குமுறை தமிழ் பேசும் மக்களைத் தீண்டி அவர்களது தேசிய தனித்துவத்தையும் ஜீவாதார வாழ்வையும் சீர்குலைக்க முனைந்தது.
சிங்கள அரச ஒடுக்குமுறையின் அட்டூழியத்திற்கு முதன்முதலாக பலிகடா ஆனவர்கள் மலையகத் தமிழ்ப் பாட்டாளி மக்களாவர். 1948, 1949ம் ஆண்டுகளில் அதர்மமான குடியுரிமைச் சட்டங்களை நிறைவேற்றி சிங்கள அரசானது 10 லட்சம் தோட்டத் தொழிலாளரின் வாக்குரிமையை பறித்தெடுத்தது. இந்த அக்கிரமமான செயல்மூலம், இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்கிய இந்த உழைக்கும் மக்கள் நாடற்றவர் என்ற இழிநிலைக்குத் தள்ளப்பட்டதுடன் அடிப்படை மனித உரிமைகளையும் இழந்தனர்.
தமிழ்த் தேசியத்தை சீர்குலைக்கும் நாசகார நோக்கத்துடன் சிங்களப் பேரினவாத அரசுகள் தமிழ்ப் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித் தன. இலங்கை ‘சுதந்திரம்’ அடைந்ததை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட இந்தக் குடி யேற்ற ஆக்கிரமிப்பு இதுவரை கிட்டத்தட்ட ·இரண்டாயிரம் சதுர மைல் அளவி லான தமிழ் மண்ணை விழுங்கியுள்ளது. இந்தக் குடியேற்றங்கள் தமிழ்த்தாயகத்தின் பூகோள அமைப்பை படிப்படியாக கபளீகரம்செய்து, தமிழ் பேசும் மக்களை தமது சொந்த மண்ணிலேயே சிறுபான்மையினராக்கும் ஆபத்தான அம்சங்களைக் கொண்டவை.
அரச ஒடுக்குமுறையானது தமிழ் மக்களின் மொழி, கல்வி, தொழில் போன்ற மூலாதார வாழ்வு அம்சங்களைத் தீண்டியது. 1956ம் ஆண்டின் தனிச் சிங்களச் சட்டம் தமிழ் மொழியின் சமஅந்தஸ்திற்கு குழிபறித்துவிட்டு சிங்களத்தை அரச மொழியாக்கியது. இந்த இனவாத மொழிச்சட்டம், அந்நிய மொழியான சிங்களத் தை தமிழ் மக்கள் மீது திணிக்க முயன்றதுடன், தமிழர்களுக்கு வேலைவாய்ப்புக் கதவு களை நிரந்தரமாக மூடியது.
கல்வித் துறையிலும் சிங்கள இனவாதம் ஊடுருவி தமிழ் இளம் சமூகத்தினரின் உயர்கல்வி வாய்ப்புகளுக்கு ஆப்பு வைத்தது. 1972 ல் தரப்படுத்தல் என்ற இனப் பாகுபாட்டுச் சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டதால் » பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின், உயர் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது.
இவ்விதம் அரச ஒடுக்குமுறையானது தமிழீழ மக்களின் மொழியுரிமை, கல்வியு ரிமை, வேலைவாய்ப்பு உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை நசுக்கியது. அத் தோடு தேசிய அபிவிருத்தி திட்டங்களிலிருந்தும் தமிழ்த் தாயகம் திட்டமிட்ட முறை யில் ஒதுக்கப்பட்டது. தமிழர் தாயகம் தேய, சிங்கள தேசம் வளர்ந்தது. இவ்வித திட்டமிட்ட நாசகார நடவடிக்கைகளினால் ஈழத் தமிழ் மக்கள் என்றுமில்லாத பொருளாதாரச் சீர்குலைவை எதிர்நோக்கினர்.
அப்பட்டமான இனப்படுகொலை
தமிழீழ மக்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட ஒடுக்குமு றையை ஒரு அப்பட்டமான இன ஒழிப்புத் திட்டம் என்றே கொள்ளவேண்டும். இந்த இன ஒழிப்புத் திட்டம் இரு அம்சங்களைச் கொண்டது. ஒன்று, தமிழ்த் தேசியத் தின் தூண்களாக விளங்கும் மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், பாரம்பரிய பூமி ஆகியனவற்றைப் படிப்படியாகத் தாக்கித் தமிழீழ மக்களின் தேசிய அமைப்பையும், தனித்துவத்தையும் அழிப்பது. இரண்டாவது தமிழ் மக்களைப் பெருந்தொகையில் படுகொலை செய்து அழிப்பது. இலங்கையில் தலைதூக்கிய இனக்கலவரங்கள் அனைத்தும் இந்த இரண்டாவது ரக இன ஒழிப்பின் கோர வெளிப்பாடுகளாகவே அமைந்தன. 1956, 1958, 1961, 1974, 1977, 1979, 1981, 1983ஆம் ஆண்டுகளில் வெடித்த இனப்பூகம்பங்கள், சிங்கள அரசின் மேற்பார்வையில் தமிழர்களை சங்காரம் செய்யும் நோக்குடன் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இந்த இனப் பிரளயங்களில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கப்பட்டனர். பல கோடிக்கணக்கில் தமிழரின் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன. பல இலட்சம் மக்கள் வீடிழந்து அகதிகளாக்கப்பட்டனர். 1983 ஜுலை கலவரத்தை அடுத்து, தமிழ் இன அழிப்பு ஒரு புதிய, பயங்கரப் பரிமாணத்தை அடைந்தது. அதாவது, இன ஒழிப்பில் சிங்களப் படைகள் எவ்வித கட்டுப்பாடுமின்றி பகிரங்கமாக ஈடுபடத் தொடங்கின. விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் ரீதியில், பொதுமக்களைப் பெரும்தொகையில் அழிக்கும் இனச் சங்காரத்தை நடத்தின. 1983 ஜுலையிலிருந்து இன்றுவரை சிங்கள அரசின் இனவொழிப்புப் பயங்கரவாதத்திற்கு இருபதுனாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
ஆயுதப் போராட்டத்தின் தோற்றம்
சாத்வீக ரீதியான, அமைதிவழிப் போராட்டங்கள் தொடர்ச்சியாக, மிருகத்தனமாக அடக்கி ஒடுக்கப்படும் பொழுது, ஒடுக்கப்படும் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை ஒடுக்குமுறையாளன் முற்றாக நிராகரித்து விடும் போது, நாகரீக அரசியல் மரபுகள் தழுவிய சட்டரீதியான கிளர்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்படும் பொழுது, அமைதிவழிப் போராட்டங்களில் இழையோடுகிற ஆன்மீக உணர்வுகளை ஒடுக்குமுறையாளன் நிர்தாட்சண்யமாக அசட்டை செய்யும்போது, அரசியல் கிளர்ச்சியானது புரட்சிகர ஆயுதப் போராட்ட வடிவில் வெடித்துக் குமுறுகிறது. இந்த யதார்த்த உண்மையை, உலகின் ஒடுக்கப்பட்ட மக்களினது சுதந்திரப் போராட்ட வரலாறுகள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய ஒரு வரலாற்று ஓட்டத்திலேயே தமிழீழ தேசிய சுதந்திரப் போராட்டமும் வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது.
தமிழ் மக்கள் காலங்காலமாக அமைதி வழியிலேயே தங்களது அரசியற் போராட்டங்களை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். தங்களது அடிப்படை மனித உரிமைகளை வென்றெடுப்பதற்காகக் காந்திஜீயின் அகிம்சைக் கோட்பாட்டினைப் பின்பற்றிய தமிழ் மக்கள், சத்தியாக்கிரகப் போராட்டங்களை நடத்தினர். கால் நூற்றாண்டு காலமாக ஒற்றை ஆட்சி அமைப்பிற்குள் சமஸ்டி உரிமை கோரிப் போராடி வந்துள்ளனர். பெரும்பான்மைச் சிங்கள மக்களுடன் சமாதானத்துடனும், ஒற்றுமையுடனும் இணைந்து வாழ்வதற்குச் சாத்தியமான சகல முயற்சிகளையும் தமிழ் மக்கள் மேற்கொண்டனர். ஆனால் தமிழ் மக்களின் நியாயமான, சட்டபூர்வமான, நாகரீகமான கோரிக்கைகள் அனைத்தும் சிங்கள ஆட்சியாளர்களால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டன. 1961ஆம் ஆண்டில் தமிழீழ அரசியல் அரங்கில் பிரவாகமெடுத்த சாத்வீகப் புரட்சி வெள்ளம், எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மகத்தான வரலாற்று நிகழ்வாகும். சத்தியாக்கிரகமாக, ஒத்துழையா இயக்கமாக வெடித்த அரசியல் கிளர்ச்சி, மாபெரும் தேசிய எழுச்சியாக உருவம் எடுத்தது; ஒன்றுபட்ட மக்களின் எதிர்ப்பு இயக்கமாக வடிவம் பெற்றது. ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் உரிமைப் போராட்டத்தினை மனிதாபிமான முறையில் தீர்த்து வைப்பதற்கு மாறாக, சிங்கள இனவாத அரசு இராணுவ அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுத் தமிழ் மக்களின் அமைதிவழிப் போராட்டங்களை ஈவிரக்கமின்றி நசுக்கியது. இவ்வாறு தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும், தொடர்ச்சியான இராணுவப் பயங்கர வெறியாட்டமும், சிங்களத் தலைமைப்பீடம் மாறி மாறி இழைத்து வந்த நம்பிக்கைத் துரோகங்களும், தமிழர்களுக்கு அமைதிவழிப் போராட்டங்களில் நம்பிக்கையைத் தகர்த்தது; சமாதான முறையில், சமரசப் பேச்சுக்கள் மூலம் தங்களது பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சாத்தியமில்லை என்பதை உணர்த்தியது. வரலாற்றின் இந்த நெருக்கடியான காலகட்டத்தில்தான் புரட்சிகர ஆயுத எதிர்ப்பியக்கம் தோற்றம் கண்டது. சிங்கள அரசு கட்டவிழ்த்து விட்ட காட்டுமிராண்டித்தனமான இன ஒழிப்பு ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஆயுதம் ஏந்திப் போராடுவதைத் தவிர வேறு எந்த வழியும் இருக்கவில்லை. தாங்கொணா ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டிய இறுதிக் கட்டத்திற்கு தள்ளப்பட்ட எமது மக்கள், வன்முறைப் போராட்டத்தை வரித்துக் கொண்டது தவிர்க்க முடியாதது. ஆகவே, ஆயுத வன்முறைப் போர் வடிவமானது தமிழீழ மக்களின் அரசியற் போராட்டத்தின் ஒரு புதுமுகத் தோற்றப்பாடாகவும், உயர்கட்ட வளர்ச்சியாகவுமே கொள்ளப்பட வேண்டும். அரச ஒடுக்குமுறை, சிங்கள-தமிழ் தேசிய இனங்கள் மத்தியில் முரண்பாட்டைக் கூர்மையடையச் செய்து, அப்பிரதான முரண்பாட்டின் வரலாற்றுக் குழந்தையாகவே ஆயுதப் போராட்டம் பிறப்பெடுத்தது. இவ்விதம் தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டமானது அகிம்சை வடிவத்திலிருந்து புரட்சிகர ஆயுதப் போராட்ட வடிவமாக மாபெரும் வரலாற்றுத் திருப்பத்தை அடைந்தது.
புரட்சிகரத் தமிழ் இளைஞர்கள் மத்தியிலிருந்தே ஆயுதப் புரட்சிகர இயக்கம் கருக் கொண்டது. மாறி, மாறிப் பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் நடைமுறைப்படுத்திய இனவாதக் கொள்கைகளால், தமிழினத்தின் சமூக, பொருளாதார வாழ்வில் ஏற்பட்ட பாரதூரமான பாதிப்புக்களே, தமிழ் இளைஞர்களைப் புரட்சிகரப் போராட்டப் பாதையை முன்னெடுக்க நிர்ப்பந்தித்தன. சிங்கள அரசின் பாரபட்சமான, தமிழர்களுக்கு எதிரான ‘தரப்படுத்தல்’ கல்விக் கொள்கையும், ‘சிங்களம் மட்டும்’ என்ற மொழிக் கொள்கையும், உயர் கல்விக்கும், வேலை வாய்ப்பிற்குமான கதவுகளை முற்றாக மூடிவிட்டிருந்தது. இதன் விளைவாக, படித்த தமிழ் இளைஞர்கள் விரக்தியும், வெறுமையும் நிறைந்த இருள்மயமான எதிர்காலத்தை எதிர்கொண்டனர். மேலும் தமிழ் இளைஞர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும் நாளாந்தம் தீவிரமடைந்து வந்தது. அரசின் அடக்குமுறைக் கருவிகளான ஆயுதப் படைகளும், காவற்துறையும் தமிழ் இளைஞர்களைக் காரணமின்றிக் கைதுசெய்தும், மிருகத்தனமாகச் சித்திரவதை செய்தும், படுகொலை செய்தும் அட்டூழியங்களைப் புரிந்தன. தமிழ் இளைஞர்களே அரச பயங்கரவாத அட்டூழியங்களுக்கு நேரடியாக இலக்காகி, மிகவும் கொடூரமான அடக்குமுறைக்கு ஆளாகினர்.
வேலையில்லாத் திண்டாட்டத்தால் ஏற்பட்ட விரக்தி, கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால் எழுந்த வெறுப்பு, தொடர்ச்சியான பொலீஸ்-இராணுவ அட்டூழியங்களால் பிறந்த ஆத்திரம்; இவை, தீவிரவாத தமிழ் இளைஞர்களைப் புரட்சிப் பாதையில் ஈர்த்தது. தங்களது மோசமான வாழ்க்கை நிலையைப் பூரணமாக மாற்றியமைக்கத் தமிழ் இளம் சமுதாயம் உறுதிபூண்டது. ஒரு புரட்சிகர சோசலிசப் போராட்டம் மூலமே தங்களது தலைவிதியை மாற்றியமைக்க முடியும் என்பதை அரசியல் விழிப்புணர்வு பெற்ற தமிழ் இளைஞர்கள் உணர்ந்து கொண்டனர். இளைய தலைமுறையினர் சரியாக உணர்ந்து கொண்டதுபோல, கூர்மையடைந்து வந்த தேசிய ஒடுக்குமுறையின் யதார்த்த சூழலில், தேசிய விடுதலைக்கும், சோசலிச சமூக மாற்றத்திற்கும் ஆயுதப் போராட்டமே ஒரேயொரு வழியாக எஞ்சி நின்றது.




