எழுவோம் விழ விழ எழுவோம்!

எழுவோம் விழ விழ எழுவோம்!
“ஊர் கொடுத்தார் புலவருக்கு
உவந்தளித்தார் மிடி தீர
தேர் கொடுத்தார், திருக் கொடுத்தார்,
தெரு வெல்லாம் பவனி வர;
கார் நிறத்துக் கரி கொடுத்தார்;
காற்று விசைப் பரி கொடுத்தார்”
என்று வியந்து தொடங்குகிறது அவரது “கரும்புலி காவியம்”.
“காவியமாய் புதுப் புறம்பாடி” எம்
காலத்து வரலாற்றை நான் பொறிக்க வேண்டும்
சீவியத்தை மண் மீட்கத் தந்து – சென்ற
செங்களத்து மறவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்”

மாமனிதர் கவிஞர் நாவண்ணன் 

தமிழ்மொழி!

உலகின் மூத்த மொழி என்று வரலாற்று ஆய்வாளர்களால் போற்றப்படும் மொழி எம்முடைய தமிழ்மொழி ஆகும். பதின்நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த சுப்பிரமணிய பாரதியார் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ எனக் கூறி தமிழ் மொழியினைச் சிறப்பித்துள்ளார்.

தமிழீழம்!

ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய விடுதலைப் போராட்டங்களே இன்றைய உலக வரலாற்றின் போக்கை நிர்ணயிக்கும் மாபெரும் போராட்ட சக்தியாக முக்கியம் பெறுகின்றன. ஏகாதிபத்தியம், நவ காலனித்துவம், இனவாதம் போன்ற அடக்கு முறை அட்டூழியங்களுக்கு எதிராக இன்று உலகின் பல அரங்குகளில் ஒடுக்கப்பட்ட சமூகங்களும். தேசிய இனங்களும் கிளர்ந்தெழுந்து புரட்சிகர சுதந்திரப் போராட் டங்களை நடத்திவருகின்றன. இந்த தேசிய சுதந்திரப் போராட்டங்கள் ஒவ்வொன்றும் தனக்கே உரித்தான யதார்த்த புறநிலைகளையும் தனித்தன்மைகளையும் கொண் டுள்ளன என்பது உண்மையே.ஆயினும் இப் போராட்டங்கள் அனைத்தும் உலக வரலாற்றின் இயங்கு நியதிக்கு உட்பட்டே செயல்படுகின்றன. இந்த வரலாற்று இயக்கமானது ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் மத்தியில் எழும் போராட்டமாகவே வெடிக்கிறது. ஆகவே தேசிய விடுதலைப் போராட்டங்கள் சாராம்சத் தில் முற்போக்கானவை; புரட்சிகரமானவை. ஏனெனில் அவை, மனித குலத்தின் வர லாற்று ஆன்மாவாகிய சுதந்திர வேட்கையை வெளிப்படுத்துகின்றன.

வையகம் உள்ளள வாகுக!

ஐயநின் மேனியின் அழகதும்,
நெஞ்சினில்
அடர்ந்துள்ள வீரத்தின் அழகும்,
அன்னைமண் தன்னையுன் ஆயிரம் கரங்களால்
அரவணைக் கின்ற பேரழகும்,
வெய்யவர் கண்டுநீ வெகுண்டெழும் போதினில்
விரிகின்ற கோபத்தின் அழகும்
விடுதலைக் கானநேர் வீதியை என்றுமே
விட்டறி யாதநின் அழகும்,
பொய்யறி வின்றியே போரறிவோடெமைப்
புலியென நிமிர்த்திய அழகும்,
புவியினில் இன்றுள தமிழரின் வாயெல்லாம்
பேசிடும் உன்பெயர் அழகும்
வையகம் உள்ளள வாகுக, அதுவரை
வயதுக் காகுக அழகா.
வாயெடுத் தாயிரம் வாழ்த்துரைத்தோம், தமிழ்
வாசலில் வாழுக தலைவா.

  • எழுவோம்

    எழுவோம் விழ விழ எழுவோம்! எழுவோம் விழ விழ எழுவோம்!“ஊர் கொடுத்தார் புலவருக்குஉவந்தளித்தார் மிடி தீரதேர் கொடுத்தார், திருக் கொடுத்தார்,தெரு வெல்லாம் பவனி வர;கார் நிறத்துக் கரி […]

Retour en haut